Main Menu

இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் மாற்றத்தை கொண்டு வரவே சர்வதேசமும் விரும்புகிறது – இரா.சம்பந்தன்

இலங்கையின் ஆட்சி அதிகார முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் சர்வதேச நாடுகள் உறுதியாக உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை சீனன்குடா பகுதியில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்ததும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரசாரக்கூட்டத்தில் இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் தமிழர்களது பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பதை சர்வதேசம் வலியுறுத்துகின்றது. எனவே நாம் சர்வதேச ரீதியாக பலமாக இருக்கின்றோம்.

இலங்கையில் ஆட்சிமுறை, அதிகார முறை அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டு, அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அந்தந்த பிராந்தியங்களில் வாழும் மக்கள் அந்த அதிகாரங்களை பயன்படுத்தி பொருளாதார ரீதியில் சமூக, சமய, கலாசார ரீதியில் முன்னேற வேண்டும் எனும் கருத்தில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர்.

அதனை புதிய  நாடாளுமன்றத்தில் தாமதமில்லாமல் நிறைவேற்ற நாம் முன்னிற்போம். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஆளும் தரப்பில் பிளவுகள் ஏற்பட்டதனால் எம்மால் அந்த கருமங்களை நிறைவேற்ற முடியாது போனது. ஆனாலும் பல முன்னேற்றகரமான செயற்பாடுகள் காணப்பட்டது.

அரசியல் தீர்வு சம்பந்தமாக நாங்கள் முன்னெடுத்து வந்த செயற்பாடுகளில் முன்னேற்றம் இருக்கின்றது.  நாங்கள் பலமாக  நாடாளுமன்றம் செல்வோமானால் எம்மால் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...