Main Menu

இறந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட மாட்டாது – டெல்லி அரசு

கொரோனா தொற்று உறுதிபடுத்தப்படாமல் உயிரிழக்கும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட மாட்டாது என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துவிட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களை கையாள்வது குறித்த புதிய கொள்கை முடிவுகளை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  அதாவது  இனி இறந்த உடல்களுக்கு கொரோனா  சோதனை மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா  அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு குறித்த வைரஸ் தாக்கம்   இருப்பதற்கான வாய்ப்பு இருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதும்பட்சத்தில் கொரோனா சந்தேக மரணமாகவே அதனைக் கருதலாம் எனவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

பகிரவும்...