Main Menu

இந்த வாரத்தினுள் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இவ்வாரத்தினுள் அறிவிக்கப்படுவார் என எதிர்ப்பார்ப்பதாக தபால் சேவை மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.

கண்டி, மடவல பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தற்போது, ஐக்கிய தேசிய கட்சியினுள் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்வதில் பிரச்சினைக்குரிய நிலையை காணக்கூடியதாய் உள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், எவ்வித பிரச்சினையும் கட்சியினுள் இல்லை எனவும் சரியான வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான தாமதம் மட்டுமே என தெரிவித்தார்.

ஆட்சியில் உள்ள கட்சி என்ற வகையில் இந்த தேர்தலை வெற்றிக் கொள்ள முடியும் என நம்புவதாகவும், இவ்வாரத்தினுள் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...