Main Menu

இந்திய ராணுவம் சீன எல்லையில் அதிக கவனம் செலுத்தும் – ராணுவ தளபதி எம்.எம். நரவானே

பாகிஸ்தான் எல்லைப்புற பதற்றம் ஒரு புறம் இருந்தாலும் இனிமேல், இந்திய ராணுவம் சீன எல்லையில் அதிக கவனம் செலுத்தும் என்று ராணுவ தளபதி எம்.எம். நரவானே தெரிவித்திருக்கிறார்.

இந்திய ராணுவத்தின் 28 ஆவது தளபதியாக பொறுப்பேற்ற நரவானே, டெல்லி இந்தியா கேட்டில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சிறிது நேரம் உரையாடிய அவர்,  சீன எல்லையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார். எந்த விதமான சூழலிலும் நாட்டை காக்கும் பணியில் ராணுவத்தை தயார் நிலையில் வைப்பதே தமது திட்டம் என்றார் அவர்.

தமது பதவிக்காலத்தில் ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அவர், மனித உரிமைகள் மீறப்படாமல் இருக்க ராணுவம் அறிவுறுத்தப்படும் என உறுதி அளித்துள்ளார்.

பகிரவும்...