Main Menu

இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 70 இலட்சத்தைக் கடந்தது

இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70 இலட்சத்தைக் கடந்துள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸினால் அமெரிக்காவை அடுத்து அதிக பாதிப்பை கொண்ட நாடாக இந்தியா இடம்பிடித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 13 நாட்களில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்து இலட்சம் அதிகரித்துள்ளது.

நேற்று மாத்திரம் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70 இலட்சத்து 51 ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இதேநேரம் நேற்று மாத்திரம் 921இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்ச்து 8 ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து இந்தியாவில் இதுவரை 60 இலட்சத்து 74 ஆயிரத்து 863 பேர் குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 8 இலட்சத்து 68 ஆயிரத்து 309 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அவர்களில் 8 ஆயிரத்து 944 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...