Main Menu

இதுவரை நாற்பதாயிரம் பேருக்கு தண்டப் பணம் அறவிட்ட காவல் துறையினர்

செவ்வாய்க்கிழமையில் இருந்து பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் இருங்கள் என அறிவிக்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பேருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.  போதிய காரணம் மற்றும் ஆவணங்கள் இன்றி வெளியில் பயணிப்போருக்கு தண்டப்பணம் அறவிடப்படுகின்றது. அதுபோல் இதுவரை காவல்துறையினர் 867,695 பேரை அவர்கள் சோதனையிட்டுள்ளனர். மொத்தமாக 38,994 பேருக்கு தண்டப்பணம் அறவிட்டுள்ளனர்.  கொரோனா வைரஸ் காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்கும் படி ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்ததை அடுத்து, நாடு முழுவதும் 100,000 காவல்துறை மற்றும் ஜோந்தாமினர் குவிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் மாத்திரம் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து. இருந்த போதும், நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி மற்றும் மருத்துவ பொருட்கள் வாங்க அனுமதி பத்திரத்துடன் வெளியே செல்லலாம். 

பகிரவும்...