Main Menu

இங்கிலாந்திலிருந்து கொரோனா தொற்று வருவதை தவிர்ப்பது குறித்து ஸ்கொட்லாந்து கவனம் செலுத்துகின்றது

பிரித்தானியாவின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் கொரோனா வைரஸை ஸ்கொட்லாந்திற்கு கொண்டு வருவதைத் தவிர்ப்பது குறித்து தனது அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்தில் நேற்று கொரோனா வைரஸ் உறுதியான புதிய நோயாளிகளின் எண்ணிக்கை ஒற்றை எண்ணிக்கையாகக் குறைந்ததுள்ளது.

இந்நிலையில் பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள நிக்கோலா ஸ்டர்ஜன், ஸ்கொட்லாந்து தற்போது பிரித்தானியாவில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்த திட்டமிடவில்லை, ஆனால் தேவைப்பட்டால் முடிவெடுக்கும் என கூறினார்.

அத்தோடு பிரித்தானியாவின் பிற பகுதிகளிலிருந்து வைரஸ் வராது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களை வரவேற்கப்போவதில்லை என்பது பற்றி அல்ல ஆனால் அது ஸ்கொட்லாந்து மக்களைப் பாதுகாக்க முயற்சி செய்வதற்கான முடிவு” என்றும் நிக்கோலா ஸ்டர்ஜன் சுட்டிக்காட்டினார்.

பகிரவும்...