Main Menu

ஆஸ்திரியா பயங்கரவாத தாக்குதல்: இத்தாலி- ஜேர்மனி கடும் கண்டனம்!

ஆஸ்திரியாவின் மத்திய வியன்னாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இத்தாலி மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

இத்தாலிய பிரதமர் கியூசெப் கோன்டே மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சபையின் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோரும் இந்த தாக்குதல்களுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சகம் ஆஸ்திரியாவிலிருந்து வந்த தகவல்கள் ‘திகிலூட்டும் மற்றும் குழப்பமானவை’ என்று கூறிள்ளது.

நகரின் மையப்பகுதியில் உள்ள central Schwedenplatz சதுக்கத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 2பேர் உயிரிழந்ததோடு, ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட 15 பேர் மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 7பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

ஆறு வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் படையினரால் கொல்லப்பட்டார்.

பகிரவும்...