Main Menu

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி: திமுக எம்.பி. கனிமொழி கைதாகி விடுதலை

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது இளம்பெண் கற்பழித்து கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திமுக மகளிர் அணியினர் மெழுகுவர்த்தி பேரணி மேற்கொண்டு ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தும் போராட்டம் நடைபெறும் என மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி சின்னமலையில் இருந்து திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் மெழுகுவர்த்தி பேரணி தொடங்கியது. அவர்கள் கவர்னர் மாளிகை நோக்கி சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் கனிமொழி கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் வாகனத்தை செல்ல விடாமல் சாலையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கனிமொழி விடுதலை செய்யப்பட்டார்.

பகிரவும்...