Main Menu

ஆரோக்கியமாக பிறந்துள்ள 6 கிலோ நிறையுடைய பெண் குழந்தை

குழந்தைகள் பிறக்கும் போது சராசரியாக 3 கிலோ வரையிலான எடையில் இருக்கும் சில குழந்தைகள் சற்று குறைவாகவும், சில குழந்தைகள் சற்று அதிகமாக இருப்பது சாதாரணம் தான். 

ஆனால் அவுஸ்திரேலியாவின்  சிட்னி நகருக்கு தெற்கே உள்ள ஊலோங்காங் என்ற பகுதியில் உள்ள வைத்தியசாலையில், அண்மையில் ஒரு பெண் குழந்தை சுமார் 5.88 கிலோ எடையுடன் பிறந்துள்ளது.

38 வாரங்கள் தாயின் வயிற்றிலிருந்த அந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டது.

இந்த குழந்தைக்கு அவர்களது பெற்றோர் ” ரெமி கிரேஸ் மில்லர் ” எனப் பெயரிட்டுள்ளனர்.

ரெமியின் தாய் ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு தன்னுடன் ஒரு ‘மினி சுமோ மல்யுத்த வீரர்’ இருப்பதாக  கூறியுள்ளார்.

இதே போல ரெமிக்கு முன் அந்த பெண்ணிற்குப் பிறந்த குழந்தைகளும் பிறக்கும்போது முறையே 5.5 கிலோ 3.8 கிலோ எடை கொண்டவர்களாக இருந்ததாக அவர்களது தாய் தெரிவித்தார்.

சுமார் 6 கிலோ எடையில் குழந்தை பிறந்த சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

பகிரவும்...