Main Menu

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள் அணி!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 47 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக, நிக்கோலஸ் பூரன் 67 ஓட்டங்களையும், எவின் லெவிஸ் 54 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு 248 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 200 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.

பகிரவும்...