Main Menu

அரச கரும மொழிகள் வாரம் நாளை திங்கட்கிழமை ஆரம்பம்

அரச கரும மொழிகள் வாரம் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது.

இது எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் ஐந்து நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. அரச கரும மொழிகள் வாரத்தின் முதல் நாள் அங்குரார்ப்பண நிகழ்வு மொழியுடன் வளர்வோம் – மனங்களை வெல்வோம் என்ற தொனிப்பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

அமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலில், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு இதனை ஏற்பாடு செய்துள்ளது. ஜேர்மன் அரசாங்கத்தின் வெளிவிவகார அலுவலகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இது ஏற்பாடாகியுள்ளது.

இரு மொழிகளைக் கற்போம் – நாட்டைக் காப்போம் என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இரண்டாம் நாள் நிகழ்வு கொழும்பு இசிப்பதான கல்லூரில் பாடசாலை மாணவர்களின் பங்கேற்புடன் இடம்பெறும்.மொழியே ஒளியாகும் எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் 3ம் நாள் நிகழ்வு கொழும்பு கோட்டை மிலோதா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து மொழிகளின் அருணோதயம் எனும் தொனிப்பொருளிலான நான்காம் நாள் நிகழ்வு பத்தரமுல்ல அப்பேகம வளவில் இளைஞர்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐந்தாம் நாள் நிகழ்வு சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

பகிரவும்...