Main Menu

அரசியல்வாதிகளும் பயங்கரவாதிகளே – மகேஷ் சேனநாயக்க

அரசியல்வாதிகளும் பயங்கரவாதிகள் எனவும் அவர்களிடமிருந்து இந்த நாட்டினை காப்பாற்றுவதற்காகவே தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும் தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனநாயக்கவின் மக்கள் சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) திருகோணமலையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “கடந்த 71 வருட காலமாக நம்மை பிரித்து அரசியல் நாடகமாடிக் கொண்டிருக்கும் இந்த இரண்டு பிரதான கட்சிகளை நாம் தோற்கடிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இது.

எந்தவொரு நாட்டிலும் இல்லாதவாறு நாட்டை ஆள்கின்ற 225 ஆட்சியாளர்களும் வேண்டாம். எமக்கு இராணுவ ஆட்சியே வேண்டும் என மக்கள் தெரிவித்த நாடு எம்நாடு. இவ்வாறு நம்மை இந்த நிலைக்கு கொண்டுவந்தது எமது ஆட்சியாளார்கள்.

கல்வி, சுதந்திரம், விவசாயம், இளைஞர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. நாட்டு மக்களது எதிர்காலமே கேள்விக்குறியான நிலைக்கு எம்மை இந்த அரசியல்வாதிகள் தள்ளியுள்ளார்கள். இதனை நான் ஒரு அரசியல் பயங்கரவாதமாகப் பார்க்கின்றேன்.

எமது காணி, ஒற்றுமை, சமத்துவம், மதம் எல்லாவற்றையும் இவர்கள் உருக்குலைத்தார்கள். இதனால் அரசியல்வாதிகளும் ஒரு பயங்கரவாதிகளே, அவர்களிடமிருந்து இந்த நாட்டினை காப்பாற்றுவதற்காகவே நான் இந்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளேன்” என கூறினார்.

பகிரவும்...