Main Menu

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 நாளில் அறுவை சிகிச்சை- மா.சுப்பிரமணியன் தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்போடு காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார். காவேரி மருத்துவமனை போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கான சிகிச்சை முறை குறித்து இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில், சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சையா? ஸ்டென்ட் பொருத்துவதா? என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று ரத்தம், இசிஜி பரிசோதனை நடைபெறும். இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவின்படி அமைச்சர் செந்தில்பாலாஜி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 அல்லது 3 நாட்களில் அறுவை சிகிச்சை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்...