Main Menu

அமெரிக்கருக்கும் இலங்கையருக்கும் இடையிலான போர் – ஹரின் பெர்னான்டோ

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை இன்னமும் கைவிடவில்லை என்பதை, அமெரிக்க பதிவாளர் திணைக்களத்தின் பட்டியல் உறுதிப்படுத்தியிருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

‘2019 அதிபர் தேர்தல் இப்போது அதிகாரப்பூர்வமாக ஒரு இலங்கையருக்கும் ஒரு அமெரிக்கருக்கும் இடையிலான போராக மாறியுள்ளது.

அமெரிக்க குடியுரிமையைத் துறந்தவர்களின் மூன்றாவது பட்டியலிலும், நந்தசேன கோத்தாபய ராஜபக்சவின் பெயர், இல்லை.

அவர் இன்னமும் அமெரிக்காவின் குடிமகனாகவே இருக்கிறார்.

கோத்தாபய ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சிறிலங்காவின் அதிபராக செயற்பட முடியாது.

முந்தைய காலாண்டு அறிக்கையில், கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இருக்காத போது, மூன்றாவது காலாண்டு அறிக்கையில் நிச்சயமாக அது இடம்பெறும் என்று  அவரது பேச்சாளர்கள் கூறியிருந்தனர்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

பகிரவும்...