Main Menu

அதி­கா­ர­மற்ற ஜனா­தி­பதி பத­வியை சுதந்­திர கட்சி ஏன் கோர வேண்டும்: ஜீ.எல்.பீரிஸ்

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஆகிய கட்­சிகள் கூட்­ட­ணி­  ய­மைக்கும் பட்­சத்தில் பத­வி­களைப் பிரித்­துக்­கொள்வது குறித்துப் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்டும் என்று  ஸ்ரீலங்கா சுதந்­ திரக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர கருத் தொன்றைத் கூறி­யி­ருக்­கிறார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரா­கவும், மஹிந்த ராஜ­பக்ஷ பிர­த­ம­ரா­கவும் வேண்டும் என்றும் அவர் குறிப்­பி­டு­கின்றார்.

நாட்டில் தற்­போது காணப்­படும் சூழ்­நி­லையில் இத்­த­கைய விடயங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட வேண்­டுமா?என்று ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தவி­சாளர் ஜீ.எல்.பீரிஸ் கேள்வி எழுப்­பினார்.

 19 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தின் பின்னர் ஜனா­தி­பதி பத­வி­யினால் எதையும் செய்­து­கொள்ள முடி­யாது என்றும் தயா­சிறி குறிப்­பிட்­டுள்ளார். அவ்­வா­றெனின் அத்­த­கை­ய­தொரு பத­வியை மீண்டும் ஏன்  கேட்க வேண்டும்  என்றும் பீரிஸ் கேள்­வி­யெ­ழுப்­பினார். 

நெலும் மாவத்­தையில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு கேள்வி எழுப்­பினார். அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது :எப்­போ­து­மில்­லாத வகையில் நாட்டின் அனைத்­துத்­து­றை­களும் வீழ்ச்சி கண்­டுள்­ளன. ஆளு­நர்கள் என்போர் ஜனா­தி­ப­தியின் பிர­தி­நி­தி­க­ளாவர். ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை அந்­தந்த மாகா­ணங்­களில் செயற்­ப­டுத்­து­கின்ற அதி­காரம் ஆளு­ந­ரிடம் காணப்­படும். கருத்­தடை சத்­தி­ர­சி­கிச்சை தொடர்பில் கைது செய்­யப்­பட்ட வைத்­தியர் முறை­யாக வரி செலுத்­த­வில்லை எனின், அவ­ரி­ட­மி­ருந்து  வரியை அற­வி­டு­வதே தற்­போது செய்ய வேண்­டிய காரியம்  என்று மேல்­மா­காண ஆளுநர் அஸாத் சாலி கூறு­கின்றார். 

பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு அஸாத்­சாலி வரு­கிறார் என்றால் மக்கள் பிர­தி­நி­திகள் அந்த இடத்­தை­விட்டுச் சென்­று­வி­டு­கின்­றார்கள். முதற்­த­ட­வை­யாக ஆளுநர் செல்லும் இடங்­களில் எதிர்ப்பு ஒலிகள் கேட்­கின்­றன. ஆளு­நரின் உத்­த­ர­வுகள் செயற்­ப­டுத்­தப்­ப­டாமல் இருக்­கின்­றன. ஆளுநர் ஹிஸ்­புல்­லாவின் நிலையும் இதுதான். ஹிஸ்­புல்­லா­விற்கும், தீவி­ர­வா­தி­க­ளுக்­கு­மான தொடர்­புகள் குறித்து சி.சி.ரி.வி.  கமரா மூலம் தற்­போது பல்­வேறு ஆதா­ரங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. தமிழ் ஆசி­ரி­யர்­களை இட­மாற்றம் செய்­வதை ஜனா­தி­பதி உட­ன­டி­யாக நிறுத்­தி­வைத்­தி­ருக்­கின்றார். இதி­லி­ருந்து தற்­போது ஆளு­நர்கள் தொடர்பில் ஜனா­தி­ப­திக்கும் நம்­பிக்­கை­யில்லை என்­பதே புல­னா­கின்­றது. 

அவ்­வா­றி­ருக்­கையில் மக்கள் எவ்­வாறு ஆளு­நர்­களை நம்­பு­வார்கள்? 

அர­சி­ய­ல­மைப்­பின்­படி 36 அதி­கா­ரங்கள் மாகா­ண­ச­பை­க­ளுக்கு  வழங்­கப்­பட்­டுள்­ளன. தற்­போது வரையில் 8 மாகா­ண­ச­பை­களின் பத­விக்­காலம் முடி­வ­டைந்­துள்­ளது. எனவே அந்த 8 மாகா­ண­ச­பைகள் தொடர்­பான அனைத்து அதி­கா­ரங்­களும் ஆளுநர் வசமே காணப்­ப­டு­கின்­றது. ஆளு­ந­ருக்கும், மக்­க­ளுக்கும் இடையில் முரண்­பா­டொன்று ஏற்­பட்­டுள்ள இந்தச் சூழ்­நி­லையில் மாகா­ண­ச­பை­களின் செயற்­பா­டுகள் முழு­மை­யாகப் பாதிக்­கப்­படும் நிலை உரு­வா­கி­யுள்­ளது.

பத­வி­களைப் பிரித்­துக்­கொள்­வது குறித்துப் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர கருத்­தொன்றைத் தெரி­வித்­தி­ருக்­கிறார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரா­கவும், மஹிந்த ராஜ­பக்ஷ பிர­த­ம­ரா­கவும் வேண்டும் என்றும் அவர் குறிப்­பி­டு­கின்றார். நாட்டில் தற்­போது காணப்­படும் சூழ்­நி­லையில் இத்­த­கைய விட­யங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட வேண்­டுமா? 19 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தின் பின்னர் ஜனா­தி­பதி பத­வி­யினால் எதையும் செய்­து­கொள்ள முடி­யாது. அவ்­வா­றெனின் அத்­த­கை­ய­தொரு பத­வியை மீண்டும் ஏன்  கேட்க வேண்டும்?

அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான விவா­தத்தை இம்­மாதம் 18 ஆம் திகதி வரை பிற்­போட்­டி­ருக்­கி­றது. இது­வி­ட­யத்தில் இறுதித் தரு­ணத்­தி­லேயே தீர்­மானம் மேற்­கொள்வோம் என்று சில அர­சி­யல்­வா­திகள் கூறு­கின்­றார்கள். இரா­ணுவத் தள­ப­தியைத் மூன்று தட­வைகள் தொடர்­பு­கொண்டு தனக்கு நெருங்­கி­ய­வர்கள் குறித்து அவர் விசா­ரித்­த­மையை ஏற்­றுக்­கொள்­கின்­றீர்­களா? அதனை ஏற்­க­வில்லை எனின், நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிப்­ப­தற்கு ஏன் தயங்க வேண்டும்? அதற்­கேற்­பவே சபா­நா­ய­கரின் செயற்­பா­டு­களும் உள்­ளன. அன்று எமது அர­சாங்­கத்­திற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கைய­ளிக்­கப்­பட்ட போது, அதில் என்ன இருக்­கி­றது என்றும் தெரி­யாமல் அப்­போதே விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொண்டார். அப்­போது அவ்­வாறு செயற்­பட்ட சபா­நா­யகர் தற்­போது நாடே தீப்­பற்றி எரி­கையில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை  மீதான விவா­தத்தை ஏன் பிற்­போ­டு­கின்றார்?

அதே­போன்று பொலிஸ்மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர உயர்­நீ­தி­மன்­றத்­திற்கு இரு­பது பக்கங்கள் கொண்ட கடிதமொன்றைச் சமர்ப்பித்திருக்கின்றார். நாட்டின் பாதுகாப்பு நிலை தொடர்பில் செயற்படுவதற்கு ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெரிவுக்குழுவின் விசாரணைகளிலும் பல்வேறு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல்  தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் கருத்து வெளியிட்டார். ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டிய காலப்பகுதி குறித்து அரசியலமைப்பின் கூறப்பட்டுள்ளது. அது பற்றிய தீர்மானம் எடுக்கும் அதிகாரம் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் வசமே உள்ளது என்றார்.

பகிரவும்...