Main Menu

அசைவ உணவுகள், தக்காளியால் சிறுநீரகக் கற்கள் உருவாகுமா

உடலில் நீரிழப்பு ஏற்படுவதே சிறுநீரகக் கற்கள் படிவதற்கு முதன்மையான காரணமாக இருக்கிறது.
அலுவலகத்தில் ஓரிடத்தில் அமர்ந்து வேலை செய்தாலும் சரி, கடுமையான உடல் உழைப்பு கொண்ட வேலையில் ஈடுபட்டாலும் சரி தினமும் குறைந்தது 2.5 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் பருகுவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படவில்லை என்றாலோ, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலோ புரதம் குறைவாக உள்ள உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
சிறுநீரகக் கற்கள் அனைத்தும் ஒரே படிகங்களால் ஆனவை அல்ல.
கால்சியம் ஆக்சலேட் உட்பட பிற ஆக்சலேட் படிகங்கள், யூரிக் அமிலம், ஸ்ட்ரூவைட் கற்கள், சிஸ்டன் கற்கள் போன்றவற்றின் காரணமாகவும் சிறுநீரகக் கற்கள் உருவாகலாம்.
இருப்பினும் ஆக்சலேட் படிகங்கள் (Oxalate crystals) மூலம் சிறுநீரகக் கற்கள் உருவாகுவது அதிகமாக இருக்கிறது.
தக்காளியில் ஆக்சலேட்டுகள் உள்ளன.
பொதுவாக சிறுநீரகக் கற்கள் உருவாகுவதற்கு ஆக்சலேட்டுகள் காரணமாக அமைந்திருக்கின்றன. இதனால் தக்காளி அதிகம் சாப்பிட்டாலோ, சமையலில் அதிகம் சேர்த்தாலோ சிறுநீரகக் கற்கள் உருவாகும் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது.
இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், 100 கிராம் தக்காளியில் சுமார் 5 மில்லி கிராம் அளவுக்கே ஆக்சலேட்டுகள் உள்ளன. அவை சிறுநீரகக் கற்களை ஏற்படுத்தப் போதுமானதல்ல.
மேலும், சில அசைவ உணவுகள் சாப்பிடுவது சிறுநீரகக் கற்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்ற கருத்தும் பலரிடம் நிலவி வருகின்றது. இதுவும் தவறான கருத்து.
உடலில் அதிகப்படியாக யூரிக் அமிலம் சேர்வது காரணமாக சிறுநீரகக் கற்கள் ஏற்பட்டால் வைத்தியர்கள் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள்.
மீன் மற்றும் விலங்கு இறைச்சியிலுள்ள புரதங்கள் உள்ளிட்ட பியூரின் நிறைந்த உணவுகளைக் குறைவாகச் சாப்பிட வேண்டும். எனினும் இந்த விஷயத்தில் உணவு முறை முக்கிய பங்கு வகிக்காது. வைத்தியர்களின் ஆலோசனையும், மருந்துமே கைகொடுக்கும்.
சிறுநீரகக் கற்கள், அடிப்படை உடல்நலப்பிரச்சனை, சில நொதிகளின் குறைபாடு அல்லது வளர்சிதை மாற்றப் பிரச்சனைகள் காரணமாக உருவாகக்கூடும்.
குறிப்பாக சிறுநீரகங்கள் உடலிலிருந்து கல்சியம் ஆக்சலேட் படிகங்களைச் சிறுநீர் வழியாக வெளியேற்றுவதை நிறுத்தும்போது ஆக்சலோசிஸ் (Oxalosis) என்னும் பாதிப்பு உருவாகும். இது அரிய வகை வளர்சிதை மாற்றக்கோளாறு ஆகும்.
இது சிறுநீரகங்களின் செயல்பாட்டை நிறுத்தி ஆக்சலேட் படிகங்கள் உருவாகுவதற்கு வழிவகுத்துவிடும்.
பகிரவும்...
0Shares