ஹொங்கொங்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இறப்பர் குண்டு துப்பாக்கி பிரயோகம்
ஹொங்கொங்கில் இன்று (புதன்கிழமை) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் இறப்பர் குண்டு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஹொங்கொங் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தினை நேரடியாக அமுல்படுத்த சீனா தீர்மானித்தமையினை தொடர்ந்து பலத்த எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சீனாவின் தேசிய கீதம் மற்றும் பீயிங்க்கின் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்திற்கு எதிராக இன்று இடம்பெற்ற போராட்டத்திலும் 240 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சட்டமன்றத்தை சுற்றி 6 அடி அளவிற்கு பாதுகாப்பு தடைகளுடன் கூடிய பிளாஸ்டிக் சுவரை அமைத்து நூற்றுக்கணக்கான கலக்கம் அடக்கும் பொலிஸார் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளும் வாகனங்கள் குவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.