ஹிஸ்புல்லாவின் புதிய தலைவர் ‘தற்காலிக நியமனம்’ தான்.. இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை
இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளது. அந்த இயக்கம் இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையடுத்து லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். மேலும் அந்த இயக்கத்தின் முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். நஸ்ரல்லா கொல்லப்பட்டதை அடுத்து ஹிஸ்புல்லா அமைப்பின் துணை பொதுச் செயலாளரான ஷேக் நயீம் காசிம் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டது குறித்து, இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் கல்லன்ட் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , “தற்காலிக நியமனம், நீண்ட காலத்திற்கானது இல்லை,” என்று குறிப்பிட்டுள்ளார். இத்துடன் காசிம் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
பகிரவும்...