வெறுப்பூட்டும் பேச்சுக்களுடன் சம்பந்தப்பட்டவர்களை முகநூலிலிருந்து நீக்க நடவடிக்கை
பேஸ்புக் சமூக வலைத்தளம் புகழ்பெற்ற நபர்களை பேஸ்புக் பாவனையிலிருந்து தடை செய்யத் தீர்மானித்திருக்கிறது.
இவர்களை ஆபத்தான தனிநபர்கள் என்று பேஸ்புக் சமூக வலைத்தளம் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தீவிர வலதுசாரி செயற்பாட்டாளரான அலக்ஸ் ஜோன்ஸ் வெறுப்பூட்டும் பேச்சுக்களில் ஈடுபட்டுவரும் பிரித்தானியாவைச் சேர்ந்த செய்தி ஆசிரியர் போல் ஜோஸப் யூத இனப் படுகொலை பற்றி கருத்து வெளியிட்டுவரும் லுயிஸ் பர்ராகான் ஆகியோர் பேஸ்புக்கிலிருந்து வெளியேற்றப்படவிருக்கிறார்கள். பேஸ்புக் சமூக வலைத்தளம் பிரித்தானியாவை தலையைகமாகக் கொண்டியங்கும் இஸ்லாமிய எதிர்ப்பு பக்கத்தையும் தடை செய்திருக்கிறது. சதிகார கோட்பாடுகள், வெள்ளை மேலாதிக்கம், இஸ்லாமிய எதிர்ப்பு பிரசாரம் என்பனவற்றில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் இந்தத் தடையை விதிக்க பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.