வெனிசுலா சிறைக்குள் பயங்கர மோதல் – 29 பேர் கொலை
வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் உள்ள அகாரிகுவா சிறைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 29 பேர் உயிரிழந்தனர்.
வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் அகாரிகுவா சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் அந்நாட்டு அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையில் கைதிகளுக்குள் கலவரம் ஏற்பட்டுள்ளது. கைதிகள் ஒருவருக்கொருவர் கொடூரமாக தாக்கியுள்ளனர். கலவரத்தை தடுக்கும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டனர்.
இந்த கலவரத்தில் 29 கைதிகள் உயிரிழந்தனர். கைதிகள் தாக்கியதில் 19 காவலர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.