Main Menu

விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு விரும்பவில்லை – ராகுல் காந்தி

விவசாயிகளின் சத்தியக்கிரகப் போராட்டத்தை சுயநல மத்திய அரசு விரும்பவில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், ”விவசாயிகளின் வன்முறையற்ற சத்தியாக்கிரப் போராட்டம் இன்றும் தொடர்கிறது. ஆனால் தனது சுயநலத்திற்காகப் பிறரைப் பயன்படுத்தும் மத்திய அரசு அதனை விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.

இதேவேளை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குறித்த சட்டமூலங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.