விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் – மைத்திரி
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கட்சியின் மத்திய குழு கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கையை ஆதரிப்பதாகவும் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு நேற்று (வெள்ளிக்கிழமை) கட்சித் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.