விஜயகாந்த் இன்று சென்னையில் பிரசாரம்
மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்று தேர்தலைச் சந்தித்து வருகிறது. உடல் நலக் குறைவு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வரும் விஜயகாந்த் தேர்தலில் பிரசாரம் செய்வாரா என்ற கேள்வி எழுந்திருந்தது.
இந்த நிலையில் தேமுதிக தலைமைக் கழகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வடசென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜையும், மத்திய சென்னையில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சாம் பாலையும், தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனையும் ஆதரித்து விஜயகாந்த் திங்கள்கிழமை மாலை 4 மணி முதல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.