Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 207 (30/12/2018)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 207 ற்கான கேள்விகள் 

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 14,31

இடமிருந்து  வலம்

01 – 05 வாக்குறுதி எனவும் பொருள் தரும் இது நிறைவேறாமல் போவதும் உண்டு.

08 – 09 தேவை என்ற என்னமா இது அதிக ஈடுபாட்டை ஏற்படுத்தக் கூடியது.(வலமிருந்து இடம்)

09 – 12 பரந்த வெளியான இது அண்டத்தின் முதல் படி (குழம்பி வருகிறது)

16 – 17 இயற்கையில் இருந்தும் செயற்கையில் இருந்தும் உருவாக்கம் பெறுவது.

22 – 23 பாதுகாப்பு அம்சங்களுடனான விதிகளுக்குட்பட்டது.(வலமிருந்து இடம்)

25 – 29 காலப்போக்கோடும் போக்குவரத்தோடும் தொடர்பு படுத்தலாம் (வலமிருந்து இடம்)

34  36 வாழ்வில் சிலருக்கு பெரும் திருப்பங்களை ஏற்படுத்தக் கூடியது.

மேலிருந்து கீழ் 

01 – 25 இந்தியாவை தாயகமாகக் கொண்ட இதன் பாவனை சட்ட பூர்வமான சான்றுகளுடனும் அமைவதுண்டு

20 – 32 ஒருவரது பேச்சில் அல்லது எழுத்தில் சுவை கொடுக்கும் தன்மை எனவும் கூறலாம் (கீழிருந்து மேல்)

03 – 15 முன்னோர் உடமை அல்லது நமது சேமிப்பு (குழம்பி வருகிறது)

21 – 33 இக் கனவுகளின் பலிதம் அசாத்தியமானது எனவும் கூறுவதுண்டு

11 – 23 ஒத்த தன்மை (குழம்பி வருகிறது)

06 – 12 உடலின் சமநிலைப்படுத்தலுக்கு தேவையானது (கீழிருந்து மேல்)

18 – 36 இதயநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டியது

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 206 ன் விடைகள் 

இடமிருந்து  வலம்

01 – 04 சின்னம்

08 – 10 புத்தி

16 – 17 மாசு

20 – 21 மென்

22 – 24 பத்து

27 – 29 வரம்

33 – 36 அகிம்சை

மேலிருந்து கீழ் 

07 – 31 குழப்பம்

08 – 20 புலன்

03 – 27 மெத்தனம்

04 – 28 மாத்திரம்

05 – 17 சுருதி

06 – 24 பந்தல்

24 – 36 பச்சை

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 206 ற்கான சரியான  விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. பிறேமா கைலாயநாதன்,  பிரான்ஸ்

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி

திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி

திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி

திருமதி. கமலவேணி நவரட்ணராஜா,  பிரான்ஸ்

திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி

திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம்,  சின்ஸ்ஹெய்ம் யேர்மனி

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி

திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி

திருமதி. விஜி பாலேந்திரா,  பிரான்ஸ்

திருமதி. சாந்தி பாஸ்கரன், யேர்மனி

 

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 206 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!