வவுனியா விபத்தில்: ஒருவர் படுகாயம்
வவுனியா- செட்டிகுளம் நகர்பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செட்டிகுளம் நகர்பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் வீதியை கடக்க முற்பட்டபோது மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
இதன்போது விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பகிரவும்...