வவுனியாவில் விஷேட அதிரடி படையினரால் இரு இளைஞர்கள் கைது!

வவுனியாவில் விஷேட அதிரடி படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து வாளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் வவுனியா பகுதியில் விஷேட அதிரடி படையினர் விஷேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது வேப்பங்குளம் பகுதியில் வாளுடன் நடந்து சென்ற 24 மற்றும் 26 வயதுடைய இருவரை விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.