Main Menu

வரியை குறைக்க அமெரிக்கா, சீனா இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன.

அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசன்ட் அறிவித்துள்ளார்.

மேலும், இரு தரப்பினரும் தங்கள் தீர்வை வரிகளை 115% குறைக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த பரஸ்பர வரிவிதிப்பை எதிர்த்து சீனா கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது. இரு உலக வல்லரசுகளும் ஒருவருக்கொருவர் வரிகளை உயர்த்தினர்.

சீன இறக்குமதிகளுக்கு 245% வரை ஒட்டுமொத்தமாக அமெரிக்கா வரிகளை விதித்தது.

 

அதே நேரத்தில் சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு 125% வரை வரிகளை விதித்துள்ளது. மேலும் அரிய வகை கனிமங்கள் உள்ளிட்ட ஏற்றுமதிகளை சீனா நிறுத்தியது.

இதனால் இரு தரப்பிலும் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளால் அமெரிக்கா – சீனா பேசுவார்த்தை நடத்த இறங்கியது. அதனபடி கடந்த 2 நாட்கள் சுவிட்சர்லாந்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதற்கமையவே வரி குறைப்பிற்கு இரு நாடுகளும் இணக்கம் வௌியிட்டுள்ளன.

பகிரவும்...
0Shares