Main Menu

லூவ்ர் (Louvre) அருங்காட்சியகம் மீண்டும் இயங்க உள்ளது

பிரான்ஸில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அருங்காட்சியமான லூவ்ர் (Louvre) அருங்காட்சியகம், மீண்டும் திறக்கப்படவுள்ளது.

பரிஸ் நகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த அருங்காட்சியகம், எதிர்வரும் ஜுலை மாதம் 6ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

உலகிலேயே மிகவும் அதிகமான பார்வையாளர்கள் வரும் அருங்காட்சியகம் இதுவென்பதால், அருங்காட்சியகத்தின் பகுதிகள் எங்கும் உள்ளே மற்றும் வெளியே என இரண்டு வெவ்வேறு திசைகளினூடான பாதைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

கடுமையான சுகாதாரக் கட்டுப்பாட்டுடனும், பாதுகாப்பு இடைவெளிகளுடனும் இந்த அருங்காட்சியகம் இயங்க உள்ளது.

வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் 19ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்த ஏறத்தாழ 35,000 அரும்பொருட்கள், 60,600 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

14ஆம் லூயுடைய அரண்மனைதான் தற்போது இந்த அருங்காட்சியகமாக உள்ளது. பரந்து விரிந்த உயர்ந்த இவ்வருங்காட்சியகம் வெளிப்பறத்தில் எவ்வித மாற்றமுமின்றி அதே பழைய கட்டடக்கலை நுட்பத்துடன் பேணப்படுகிறது. புகழ் பெற்ற ஓவியர் இலியானார்டோ டாவின்சியின் ஓவியமான மோனா லிசாவின் அசல் படி இந்த அருங்காட்சியகத்தில்தான் உள்ளது.

பகிரவும்...
0Shares