Main Menu

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் பாயும்- முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகள் ஆபத்தான கட்டத்தில் இருக்கும்போது அவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்படுகிறது. ஆனால் இந்த மருந்து போதுமான அளவு கிடைப்பது இல்லை.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே ரெம்டெசிவிர் மருந்துக்காக மக்கள் அலைமோதும் நிலை உள்ளது.

ரெம்டெசிவிர்

இதனை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு மருத்துவத்துறை பணியாளர்கள் விற்பனை செய்து வருகிறார்கள். இதனை தடுப்பதற்கு சிவில்சப்ளை சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் பாயும்.

ஆக்சிஜன் சிலிண்டர்களை அதிக விலைக்குப் விற்பனை செய்பவர்கள் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.