Main Menu

ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் 600 குழந்தைகள் உயிரிழப்பு!

ராஜஸ்தான்  மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இதுவரை 600 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் சமீப காலமாக தொடர்ந்து உயிரிழப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக கோட்டாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

குழந்தை பிறக்கும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தின்மை,  குறை பிரசவம்,  சரியான கவனிப்பின்மை உள்ளிட்ட காரணங்களே பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தமைக்கு காரணம் என கூறப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள கே.கே.லான் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 100 குழந்தைகள் நிமோனியா,  இரத்தத்தில் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளால் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை போலவே ஜோத்ப்பூரிலுள்ள உமைர் மற்றும் எம்.டி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளில் 150 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.  பிட்னரில் உள்ள பி.பி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளில் 124 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

இவ்விரு மாநிலங்களிலும் ஒரு மாதத்தில் மாத்திரம்  சுமார் 600 குழந்தைகள் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பகிரவும்...