யூரோ சாம்பியன்ஸ் லீக் : இன்டர் மிலான் அணிக்கெதிரான போட்டியில் மெஸ்சிக்கு ஓய்வு
ஐரோப்பிய கால்பந்தாட்ட தொடர்களின் பிரபலமான யூரோ சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இன்டர் மிலான் அணியை எதிர்த்து விளையாடும் போட்டியில் லியோனல் மெஸ்சிக்கு, பார்சிலோனா அணி ஓய்வு வழங்கியுள்ளது
யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட தொடரில் பார்சிலோனா ‘எஃப்’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. பார்சிலோனா ஏற்கனவே லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இறுதி லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி இன்டர் மிலானை எதிர்கொள்கின்றது. இத்தாலியில் நடைபெறும் இந்த போட்டியில் மெஸ்சிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக பார்சிலோனா கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், ஜெரார்ட் பிக்காய், செர்ஜி ரொபெர்ட்டோ ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
லூயிஸ் சுவாரஸ், கிரிஸ்மான், அன்சு ஃபட்டி ஆகியோர் அணியில் தொடர்ந்து விளையாடவுள்ளார்கள். ‘எஃப்’ பிரிவில் பார்சிலோனா ஐந்து போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 சமநிலையுடன் 11 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.
இன்டர் மிலான், டாட்ர்மண்ட் அணிகள் தலா 7 புள்ளிகளை பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.