யாழ். பண்ணை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் பண்ணை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பண்ணை பாலத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் கொக்குவில் கிழக்கை சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகவும் இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.