யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கார் விபத்து
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் – புத்தளம் பிரதான வீதி ஆரச்சிகட்டுவ பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் வெள்ளவத்தையைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்