யாழில் அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டு இராணுவம் மற்றும் பொலிஸார் குவிப்பு
மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காக யாழ்.நகரில் அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத்தடை, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியுடன் சில கட்டுப்பாடுகளுடன் தளர்ந்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்.நகரின் பிரதான வீதிகள் மற்றும் முக்கிய பகுதிகளில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு, இராணுவம் மற்றும் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக குவிக்கப்பட்டள்ளனர்.
மேலும் அவசர தேவை தவிர்ந்த ஏனைய வாகனங்கள் உள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வெளியே வருகின்றவர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள்.
அத்துடன் அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் மாத்திரமே யாழ்.நகரில் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...மேலும் படிக்க மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கெதிரான போராட்டத்தில் ஈடுப்பட்ட 1,25,000பேர் பணி இடைநீக்கம்!