Day: May 25, 2021
மலேசியாவில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 200க்கும் மேற்பட்டோர் காயம்!
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரம் இரவு 8:45 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.ஒரே ஒரு ரயில் கட்டுப்பாட்டாளருடன்சோதனை ஓட்டத்தில் சென்று கொண்டிருந்த ஒரு ரயில், பயணிகளைமேலும் படிக்க...
பெலாரஸ் மீது புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்!
வானில் இடைநடுவே போர் விமானத்தைக் கொண்டு பயணிகள் விமானத்தை தரையிறக்கிய பெலாரஸ் மீது புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன் இதேபோல் ஐரோப்பிய ஒன்றியம் வான்வழியே பெலாரஸ் நாட்டு விமானங்கள் பறப்பதற்கும் தடை விதித்துள்ளது. ஊடகவியலாளரும் பெலாரஸ்மேலும் படிக்க...
ஒடிசா படகு விபத்து: 8 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்!
ஒடிசாவில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒடிசா சிலேரு நதியில் பயணித்த படகொன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த படகில் புலம்பெயர் தொழிலாளர்கள் பயணித்துள்ள நிலையில், அதில் ஒருவர்மேலும் படிக்க...
தமிழகத்தில் கறுப்பு பூஞ்சை நோயால் 30 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
தமிழகத்தில் கறுப்பு பூஞ்சை நோயாள் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புரங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் குறித்து ஆராய்ந்துள்ள அவர், செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
மட்டக்களப்பு மாநகர சபையினால் அழிக்கப்பட்ட மரங்கள் – இளைஞர்கள் புதிய மரக்கன்றுகளை நட்டனர்
மட்டக்களப்பு மாநகரசபையின் கோட்டை பூங்கா பகுதியில் இன்று(செவ்வாய்கிழமை) இளைஞர்களினால் மரநடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை கோட்டை பூங்கா பகுதிக்கு வருகைதந்த இளைஞர்கள் இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தனர். அண்மையில் குறித்த பகுதியில் காட்சியளித்த மரங்கள் வெட்டப்பட்டதாக முகநூல்கள் ஊடாக பல்வேறு விமர்சனங்கள்மேலும் படிக்க...
சஜித்திற்கு கொரோனா: மூடப்பட்டது எதிர்க்கட்சி அலுவலகம்
சஜித் பிரேமதாசவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. குறித்த அலுவலகம் நேற்று (திங்கட்கிழமை) முதல் மூடப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது சஜித் பிரேமதாசவுடன்மேலும் படிக்க...
யாழில் அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டு இராணுவம் மற்றும் பொலிஸார் குவிப்பு
மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காக யாழ்.நகரில் அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத்தடை, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியுடன் சில கட்டுப்பாடுகளுடன் தளர்ந்தப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்.நகரின் பிரதான வீதிகள் மற்றும் முக்கிய பகுதிகளில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு, இராணுவம் மற்றும்மேலும் படிக்க...