மைத்திரியின் கனவு நனவாகாது – சரத் பொன்சேகா
புதிய அரசாங்கத்தை அமைக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கனவுகள் ஒருபோதும் நனவாகாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்திற்கு பதிலளிக்கும்போதே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றபோது வெளிநாட்டில் இருந்தமையினால் அதனை தடுக்க முடியாமல் போனது என கூறிய மைத்திரிபால இவ்வாறு கூறுவது ஏற்புடையதல்ல என்றும் குறிப்பிட்டார்.
மேலும் பொருளாதார பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் பதிப்படையச் செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் பொன்சேகா கேட்டுக்கொண்டார்.