முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம் – சோனியா, ராகுல் அஞ்சலி
முன்னாள் பிரதமர் நேருவின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், அவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
நேருவின் நினைவு தினத்தையொட்டி, சாந்திவன் பகுதியில் உள்ள நேரு நினைவிடத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசு முன்னாள் துணைத்தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நம் நாட்டிற்காக முன்னாள் பிரதமர் நேரு அளித்த பங்களிப்பு நினைவுகூரத்தக்கது’ என்று தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன் – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முந்தைய செய்திகள்