மிக பிரபலமான உலக தலைவர்கள் வரிசை – முகநூலில் பிரதமர் மோடி முதலிடம்
மிக பிரபலமான உலக தலைவர்களை வரிசைப்படுத்த ‘பேஸ்புக்’ நிறுவனம் நடத்திய ஆய்வில் அதிக ‘லைக்ஸ்’ வாங்கி பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்துள்ளார்.
மிக பிரபலமான உலக தலைவர்களை வரிசைப்படுத்த ‘பேஸ்புக்’ நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. பேஸ்புக்கில் அதிக ‘லைக்ஸ்’ வாங்கி குவித்த தலைவர்கள் பட்டியலிடப்பட்டனர்.
அதில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்து, மிக பிரபலமான உலக தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பேஸ்புக்கில், அவரது தனிப்பட்ட பக்கத்துக்கு 4 கோடியே 35 லட்சம் ‘லைக்ஸ்’ கிடைத்துள்ளது. இந்திய பிரதமர் என்ற பேஸ்புக் பக்கத்துக்கு ஒரு கோடியே 37 லட்சம் ‘லைக்ஸ்’ கிடைத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு, 2-ம் இடம்தான் கிடைத்துள்ளது. அவரது தனிப்பட்ட பக்கத்துக்கு 2 கோடியே 30 லட்சம் ‘லைக்ஸ்’ கிடைத்துள்ளது.
ஜோர்டான் ராணி ரனியா, பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாரோ ஆகியோர் 3 மற்றும் 4-வது இடங்களை பிடித்துள்ளனர். கானா அதிபர் நானா அகுபோ, எகிப்து அதிபர், ஐக்கிய அரபு அமீரக துணை அதிபர், மெக்சிகோ அதிபர், அர்ஜெண்டினா அதிபர் பிரான்ஸ் அதிபர், ருமேனியா அதிபர் ஆகியோரும் இப்பட்டியலில் உள்ளனர்.