Main Menu

மாங்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு ஆளுநர் விஜயம்

மாங்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு நேற்று(24) நண்பகல் திடீர் விஜயம் மேற்கொண்ட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வைத்தியசாலையின் நிலைமைகள் குறித்து நேரில் ஆராய்ந்தார்.

இந்த வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர்கள் வைத்தியசாலையினை மிகவும் தூய்மையாக வைத்திருப்பதனை பாராட்டிய ஆளுநர் தொடர்ச்சியாக இதனை பேணுமாறும் வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கேட்டுக் கொண்டார்.