மாகாண சபை தேர்தல் ஒத்தி வைக்கப்படாது என்கிறது அரசாங்கம்
மாகாண சபை தேர்தலினை ஒத்திவைக்கும் தீர்மானம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கெலிஓயா பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.