Main Menu

மலேசியாவில் வீட்டில் பிள்ளைகளைத் தனியாக விட்டுச் சென்ற தாய்க்குச் சிறை

மலேசியாவில் தம்முடைய பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ளாமல் விட்டுச்சென்ற தாயாருக்கு ஒரு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த 41 வயது பெண்ணின் தண்டனை அவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து தொடங்கும் என்று நீதிபதி கூறினார்.

அவர் தம்முடைய 6 வயது மகனையும் 14 மாதக் குழந்தையையும் கவனிக்கத் தவறிய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

பூட்டியிருந்த வீட்டில் 2 பிள்ளைகள் இருப்பது பற்றி ஆடவர் ஒருவர் காவல்துறையிடம் புகார் செய்தார்.

விசாரணைக்குப் பிறகு பிள்ளைகளின் தாயார் 2 நாளாக வீட்டில் இல்லை என்பது தெரியவந்தது.

தீயணைப்பாளர்கள் அழைக்கப்பட்டு அந்தப் பிள்ளைகள் மீட்கப்பட்டனர்.

பகிரவும்...
0Shares