Main Menu

மதுரா டிராவல்ஸ் தலைவர் வி.கே.டி. பாலன் காலமானார்

சுற்றுலாத்துறை முன்னோடியான வி.கே.டி. பாலன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது இறுதிச் சடங்கு சென்னை மந்தைவெளியில் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1954 ஆம் ஆண்டு திருச்செந்தூரில் பிறந்த வி.கே.டி. பாலன் 1981 ஆம் ஆண்டு சென்னை வந்தார். சென்னை எழும்பூரில் உணவு, தங்கும் இடம் இன்றி தவித்த வி.கே.டி. பாலன் மக்களுக்காக வரிசையில் நின்று விசா எடுத்துக் கொடுத்து சம்பாதிக்க ஆரம்பித்தார். வரிசையில் நிற்க வருமானம் பெற துவங்கிய வி.கே.டி. பாலன் அதன் பிறகு சொந்தமாக தொழில் தொடங்கி சுற்றுலா துறையில் முன்னோடியாக வளர்ச்சி பெற்றார்.

இவர் தமிழ் நாடு அரசின் கலைமாமணி விருது வென்றுள்ளார். மதுரா டிராவல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் தலைவர் வி.கே.டி. பாலன் கடந்த சில காலமாக உடலநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், இன்று (நவம்பர் 11) பக்கவாதம் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்.

இறுதிச் சடங்கு நாளை (நவம்பர் 12) சென்னையில் உள்ள மந்தைவெளி இல்லத்தில் நடைபெற இருக்கிறது. குடும்பத்தினர், நண்பர்கள், சக பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வி.கே.டி. பாலன் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...
0Shares