மகா கும்பமேளாவில் தீ விபத்து – உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கம் எனும் இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஆன்மீக திருவிழா தான் பூரண கும்பமேளா.
ஜனவரி 12 ஆம் திகதி ஆரம்பமாகிய இந்த மகா கும்பமேளா பெப்ரவரி 26 ஆம் திகதி மகாசிவராத்திரி வரை நடைபெறும்.
45 நாட்களுக்கு நடைபெறும் இவ்விழாவில் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொள்வர் .
இந்நிலையில், லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ள உத்தரப்பிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதன் காரணமாக அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் போராடி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது .
இவ்விபத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளதாகவும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.