பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுக்ககோரி புதிய முறையில் போராட்டம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எழுவரையும் விடுக்ககோரி, தமிழக ஆளுநருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம் நடத்தப்படுகிறது.
தமிழகத்தின் பழனி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக அரசியலமைப்புக்கு அமைய தமிழக ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே ஆளுநனர், அவர்களை தாமதிக்காது விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பில் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுனரிடம் வழங்கி 9 மாதங்கள் கடந்துள்ள போதும், அளுனர் இன்னும் தமது நிலைப்பாட்டை அறிவிக்காதுள்ளமை குறிப்பிடத்தக்கது.