புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் 915 பேருக்கு இன்று இரட்டைப் பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடிவரவு குடியகல்வு திணைக்களம் இந்த தகவலை அறிவித்துள்ளது.
இரட்டை பிராஜாவுரிமை வழங்கும் நிகழ்வு அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் நடைபெற்றது. புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் திட்டம் 2015ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்கீழ் இன்று வரை 35 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுள்ளார்கள் என திணைக்களம் தெரிவித்துள்ளது.