Main Menu

புதிய அமைச்சரவை நாளைய தினம் பதவியேற்பு

புதிய அமைச்சரவை நாளைய தினமே (வெள்ளிக்கிழமை) பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மிக முக்கிய கலந்துரையாடல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும குறித்த தகவலினை வெளியிட்டுள்ளார்.

இந்த அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.