புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி
இரணைமடு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 8.45 மணியளவில் இரணைமடு புகையிரதக் கடவைக்கு அருகில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த இரவு தபால் புகையிரத்தில் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் சடலத்தை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
கனகாம்பிகை குளம், கிளிநொச்சியை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையாகிய 61 வயதுடைய இராசையா இராசேந்திரம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.