பிளாஸ்டிக் கழிவுகளின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த 180 நாடுகள் இணக்கம்
பிளாஸ்டிக் கழிவுகளின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த சுமார் 180 நாடுகள் ஐக்கிய நாட்டு ஒப்பந்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
12 நாள் கலந்துரையாடலுக்குப் பிறகு சுமார் 1,400 பிரதிநிதிகள் நேற்று (மே 10) அந்த முடிவை எட்டினர்.
ஆபத்துக்குறிய பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்த 1989இல் கையெழுத்தான Basel ஒப்பந்தமும் திருத்தப்பட்டது.
மறுபயனீடு செய்வதன் பேரில், வளர்ந்த நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகளை, வளர்ச்சியடையும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போக்கை நிறுத்த ஒப்பந்தம் முனைகிறது. ஏற்றுமதி செய்யப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பெரும்பாலும் கடலில் சென்று சேர்கின்றன.
கடலில் கண்டுபிடிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளில் பெரும் பகுதி மறுபயனீடு செய்யப்படமுடியாதவை.
தற்போது கடலில் சுமார் 100 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதாக நம்பப்படுகிறது.