பிரான்சுடன் இணைந்து செயல்படவுள்ளதாக நியுசிலாந்து பிரதமர் தகவல்
வலைதளங்கள் மூலம் தீவிரவாதம் ஊக்குவிக்கப்படுவதை தடைசெய்ய, பிரான்சுடன் இணைந்து செயல்படவுள்ளதாக நியுசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நியுசிலாந்து கிறைஸ்ட் சர்ச் பகுதியில் உள்ள இரு மசூதிகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான தகவல்கள் முகநூல் உள்ளிட்ட வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில் இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நியுசிலாந்து பிரமதர் ஜெசிந்த அர்தர்ன், வலைதளங்களில், வன்முறையை தூண்டும் தகவல்கள் மூலம் தீவிரவாத செயல் ஊக்குவிக்கப்படுவதாகவும், அதனை தவிர்க்க வருகிற 15ம் தேதி பாரிஸில் வைத்து அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மாக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதில் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் இயக்குனர்களும் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.